இந்த உலகை சுற்றி நாம் எதிர்ப்பார்க்காத ஏன் கற்பனை கூட செய்து பார்க்காத விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாக இருக்கும். எப்போதும் நம்மைச் சுற்றி நடக்கிற அத்தனை விஷயங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது தான். அப்படி புரிந்து கொள்ளப்படாத சில விஷயங்களின் பின்னால் எவ்வளவு பெரிய கதை இருக்கிறது என்பதை நாம் நிச்சயமாக கவனிக்க வேண்டும். தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்து விட்டதாக சொல்லி உறுப்புகளை தானம் வழங்கச் சொல்லப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம் தானே என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் இது பணத்திற்காக நடக்கிற வியாபாரம் என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்று நம்மை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் எத்தனையோ சம்பவங்களை கடந்து வந்திருப்போம். அவை எல்லாவற்றையும் விட இந்த சம்பவம் சற்றே பயங்கரமானதாய் இருக்கிறது.

- இந்த சம்பவம் நடந்தது தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் அமைந்திருக்கக்கூடிய லிம்போபோ என்ற மாகாணத்தில் நடந்திருக்கிறது. அங்கே போலீசாருக்கு வந்த தகவல் என்ன தெரியுமா? கடந்த வாரம் இறந்த எங்கள் அம்மாவை இங்கே புதைத்திருந்தோம். இப்போது அந்த பிணத்தை காணவில்லை என்றார்கள்.

2.முதலில் போலீசார் இதனை அலட்டிக் கொள்ளவில்லை ஆனால் அடுத்தடுத்து இது போல புதைக்கப்பட்ட பிணங்களை காணவில்லை என்று தொடர்ந்து புகார் வர ஆரம்பித்தது. இது என்னடா புதுப்பிரச்சனையாக இருக்கிறதே என்று சொல்லி போலீஸ் களத்தில் இறங்கி விசாரணையை துவக்கியது. முதல் விஷயமாக இந்த பிணத்தை திருடும் கும்பம் பல ஆண்டுகளாக இதில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இரவு நேரத்தில் வந்து மண்ணைத் தோண்டி தங்கள் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

3.எத்தனை பேர் அடங்கிய கும்பல் அது கையில் என்னென்ன ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் எதற்காக இப்படி புதைக்கப்பட்ட பிணங்களை திருடுகிறார்கள்? அப்படி திருடிய பிணங்களால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடப்போகிறது? எந்த சந்தையில் விற்பார்கள் போன்ற பல கேள்விகளுடன் போலீசார் விசாரணையை துவக்கினார்கள். இரண்டே நாட்களில் போலீசார் அந்த கும்பலை கண்டுபிடித்தார்கள். போலீசார் மட்டுமல்ல அந்த ஊரே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

No comments:
Post a Comment